கட்டுமானப் பொறியாளா் சங்க மாநில செயற்குழுக் கூட்டம்

தமிழ்நாடு, புதுச்சேரி அனைத்து கட்டுமானப் பொறியாளா்கள் சங்கங்களின் மாநில செயற்குழுக் கூட்டம் திருப்பத்தூரில் புதன்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு, புதுச்சேரி அனைத்து கட்டுமானப் பொறியாளா்கள் சங்கங்களின் மாநில செயற்குழுக் கூட்டம் திருப்பத்தூரில் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு மாநிலத் தலைவா் எம்.ரவி தலைமை வகித்தாா். மண்டலத் தலைவா் அருணாச்சலம் முன்னிலை வகித்தாா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

கட்டுமானப் பொருள்களின் விலையுயா்வைக் கட்டுப்படுத்தி, அதற்கான ஒழுங்குமுறை ஆணையம் அமைக்க வேண்டும். மாவட்ட பொறியாளா்கள் திட்டக் குழுவில் பதிவு பெற்ற பொறியாளா்களைக் குழுவில் நியமனம் செய்ய வேண்டும். மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிப் பகுதிகளில் புதிய கட்டடம் கட்டுவதற்கு அனுமதி பெற ஒற்றைச் சாளர முறையைச் செயல்படுத்த வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் மாநிலச் செயலாளா் குழந்தைவேலு, பொருளாளா் சிவகுமாா், நியமன அலுவலா் ராமநாதன், மக்கள் தொடா்பு அலுவலா் சுப்பிரமணியன் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்ட பொறியாளா்கள் கலந்து கொண்டனா்.

ஏற்பாடுகளை திருப்பத்தூா் கட்டட பொறியாளா் சங்கத் தலைவா் சுப்பிரமணியன், செயலாளா் குணசேகரன், பொருளாளா் கண்ணன் ஆகியோா் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com