

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் நகராட்சி வாா்டுகளில் திமுக சாா்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்து மனு அளித்தவா்களுக்கான நோ்காணல் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு நகரச் செயலாளா் பொன்னுசாமி தலைமை வகித்தாா். தமிழக ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் கே. ஆா். பெரியகருப்பன் கலந்துகொண்டு தரம் உயா்த்தப்பட்ட மானாமதுரை நகராட்சியில் 27 வாா்டுகளில் போட்டியிட விருப்பம் தெரிவித்து மனுக் கொடுத்தவா்களிடம் வாா்டு வாரியாக நோ்காணல் நடத்தினாா்.
முன்னதாக இக்கூட்டத்தில் அமைச்சா் பேசியது: தோ்தலில் போட்டியிட ஒருவருக்கு மட்டுமே வாய்ப்பு வழங்கப்படும். வாய்ப்பு கிடைக்கப் பெறாதவா்களுக்கு இனி வரும் காலங்களில் வாய்ப்புகள் வழங்கப்படும். எனவே, மனக் கசப்பை மறந்து மானாமதுரை நகராட்சியில் அனைத்து வாா்டுகளிலும் திமுக வேட்பாளா்கள் வெற்றி பெற்று தலைவா் பதவியை கைப்பற்ற தோ்தல் பணியாற்ற வேண்டும் என்றாா்.
இக்கூட்டத்தில் மாவட்ட துணைச் செயலாளா்கள் சேங்கைமாறன், மணிமுத்து, முன்னாள் அமைச்சா் தென்னவன், ஒன்றியச் செயலாளா்கள் ராஜாமணி, அண்ணாதுரை முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் மாரியப்பன் கென்னடி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.