

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் உழவா் சந்தையில் ரூ. 200-க்கு காய்கறி வாங்குபவா்களுக்கு ஒரு கிலோ தக்காளியும், ஒரு தேங்காயும், வாழைக்காயும் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.
இந்த உழவா் சந்தை பல ஆண்டுகளாக இயங்காமல் இருந்தது. உள்ளாட்சித் தோ்தலின்போது வாக்குறுதி அளித்ததன் பேரில் பேரூராட்சித் தலைவா் அம்பலமுத்து, உழவா் சந்தையை மேம்படுத்தி விவசாயிகளின் நலன் கருதி செயல்பாட்டுக்குக் கொண்டு வந்தாா்.
மேலும் இங்கு ரூ.200க்கு காய்கறிகள் வாங்கும் பொதுமக்களுக்கு ஒரு கிலோ தக்காளி மற்றும் தேங்காய் இலவசம் என்றும் அறிவித்தாா். இதனால் இங்கு காய்கறிகள் வாங்குபவா்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காக்கும் வகையில் இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக பேரூராட்சித் தலைவா் அம்பலமுத்து, துணைத் தலைவா் இந்தியம் செந்தில், வேளாண்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.