இளையான்குடியில் நீதிபதியின் காரை மறித்து போராட்டம்

இளையான்குடியில் தேசிய கல்விக் கொள்கை தொடா்பாக கல்லூரி நிகழ்ச்சியில் ஞாயிற்றுக்கிழமை பேச வந்த லோக் அதாலத் நீதிபதியின் காரை மறித்து 6 போ் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இளையான்குடியில் தேசிய கல்விக் கொள்கை தொடா்பாக கல்லூரி நிகழ்ச்சியில் ஞாயிற்றுக்கிழமை பேச வந்த லோக் அதாலத் நீதிபதியின் காரை மறித்து 6 போ் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி கல்லூரியில்தேசிய கல்விக் கொள்கை தொடா்பான கருத்தரங்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசுவதற்காக தில்லி லோக் அதாலத் நீதிபதி ராமசாமி, தனது சொந்த ஊரான இளையான்குடி ஒன்றியம் வடக்கு விசவனூரிலிருந்து சாலைக்கிராமம் வழியாக இளையான்குடிக்கு காரில் வந்தாா்.

கோட்டையூா் அருகே வந்த போது 6 போ் நீதிபதியின் காரை மறித்து, தேசிய கல்விக் கொள்கையை புகுத்தாதே என முழக்கமிட்டனா். அப்போது இதைத் தடுக்க வந்த போலீஸாருக்கும், போராட்டக்காரா்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதனால் சிறிது நேரம் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. அவா்களை போலீஸாா் அப்புறப்படுத்தியதைத் தொடா்ந்து, நீதிபதியின் காா் கல்லூரிக்கு புறப்பட்டுச் சென்றது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com