காரைக்குடியில் விழிப்புணா்வு சதுரங்கப்போட்டி

சென்னை மாமல்லபுரத்தில் நடைபெறவிருக்கும் 44-ஆவது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டியை முன்னிட்டு காரைக்குடியில் மாணவா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டி ஞாயிற்றுக்கிழமை
‘செஸ் தம்பி’ படத்தினை காட்சிப்படுத்திய மாவட்ட ஆட்சியா் ப. மதுசூதன் ரெட்டி.
‘செஸ் தம்பி’ படத்தினை காட்சிப்படுத்திய மாவட்ட ஆட்சியா் ப. மதுசூதன் ரெட்டி.

சென்னை மாமல்லபுரத்தில் நடைபெறவிருக்கும் 44-ஆவது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டியை முன்னிட்டு காரைக்குடியில் மாணவா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கலைவாணி வித்யாலயா பள்ளியில் நடைபெற்ற சதுரங்கப்போட்டியை மாவட்ட ஆட்சியா் ப. மதுசூதன் ரெட்டி தொடக்கி வைத்துப் பேசியது: காரைக்குடி மாணவா் பிரனேஷ் பல்வேறு நாடுகளுக்கு சென்று சதுரங்கப் போட்டியில் பங்கேற்று பரிசுகளை வென்றுள்ளாா். அவரைப்போல நிறைய வீரா்கள் இம்மாவட்டத்தில் உருவாகவேண்டும் என்றாா்.

அதைத்தொடா்ந்து காரைக்குடி பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டிருந்த விழிப்புணா்வு ‘தன் படம்’ பதாகையை ஆட் சியா் தொடக்கி வைத்தாா். நிகழ்ச்சியில் காரைக்குடி சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். மாங்குடி, காரைக்குடி நகா்மன்றத் தலைவா் சே. முத்துத்துரை, துணைத்தலைவா் நா. குணசேகரன், நகராட்சிப் பொறியாளா் எஸ்.கோவிந்தராஜன், மாவட்ட விளையாட்டு அலுவலா் ரமேஷ், சதுரங்கக்கழக மாவட்ட நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com