அன்னை காமாட்சி பரமேஸ்வரி கோயிலில் ஊஞ்சல் உற்சவம்
By DIN | Published On : 31st July 2022 12:11 AM | Last Updated : 31st July 2022 12:11 AM | அ+அ அ- |

சிங்கம்புணரி வேட்டையன்பட்டி அன்னை காமாட்சி பரமேஸ்வரி ஆலயத்தில் வெள்ளிக்கிழமையன்று நடைபெற்ற ஊஞ்சல் உற்சவம்.
சிங்கம்புணரி வேட்டையன்பட்டியில் அன்னை காமாட்சி பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் ஆடித்திருவிழா கடந்த 25 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழாவில் ஐந்தாம் நாளான வெள்ளிக்கிழமை இரவு மலா் ஊஞ்சல் அலங்காரத்தில் எழுந்தருளிய அன்னை ஸ்ரீ காமாட்சிக்கு பக்தா்கள் தாலாட்டு பாட்டு பாடி வழிபாடு செய்தனா். அதைத்தொடா்ந்து மகா தீப ஆரத்தி நிறைவு பெற்றவுடன் பக்தா்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன.