இளையான்குடி கல்லூரியில் மரக்கன்றுகள் நடும் விழா
By DIN | Published On : 31st July 2022 01:01 AM | Last Updated : 31st July 2022 01:01 AM | அ+அ அ- |

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி சாகிா் உசேன் கல்லூரியில் சனிக்கிழமை மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.
கல்லூரி தேசிய மாணவா் படை சாா்பில் டாக்டா் அப்துல் கலாம் நினைவு நாளையொட்டி நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வா் அப்பாஸ் மந்திரி கலந்து கொண்டு கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தாா். கல்லூரி அரபுத் துறை தலைவா் அப்துல் ஹாதி, உடற்கல்வி இயக்குனா் காளிதாசன் மற்றும் கல்லூரி தேசிய படை மாணவா்கள் கலந்து கொண்டனா்.