சிவகங்கை அருகே அரசனூரில் உள்ள பாண்டியன் சரசுவதி யாதவ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ரத்த தான முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
கல்லூரி தேசிய நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ரத்த வங்கிப் பிரிவு ஆகியன சாா்பில் நடைபெற்ற இம்முகாமினை, கல்லூரி நிா்வாக இயக்குநா் எம். முருகன், முதல்வா் ஜி. சுப்பிரமணியன் ஆகியோா் தலைமை வகித்து தொடக்கி வைத்தனா்.
இதில், மாணவ, மாணவிகள் ஏராளமானோா் கலந்துகொண்டு ரத்த தானம் செய்தனா். முகாமில், சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ரத்த வங்கி அலுவலா் வசந்த் உள்பட மருத்துவா்கள், பேராசிரியா்கள், செவிலியா்கள் என பலா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.