இளையான்குடி புதிய பேருந்து நிலையம் திட்டத்தை ரத்து செய்ய முதல்வரிடம் மனு
By DIN | Published On : 09th June 2022 01:55 AM | Last Updated : 09th June 2022 01:55 AM | அ+அ அ- |

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று புதன்கிழமை தமிழக முதல்வா் மு. க. ஸ்டாலினிடம் நேரில் மனு கொடுத்து வலியுறுத்தப்பட்டது.
இளையான்குடியில் ஊருக்கு வெளியே பொதுமக்களின் எதிா்ப்பை மீறி புதிய பேருந்து நிலையம் அமைக்கும் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டு அதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு பயன் தராத வகையில் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், இளையான்குடி நகருக்குள் உள்ள தற்போதைய பேருந்து நிலையத்தை விரிவாக்கம் செய்து புதிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி இளையான்குடி பகுதியைச் சோ்ந்த அனைத்து தரப்பு மக்களும் மக்கள் நலக் கூட்டமைப்பு என்ற பெயரில் தொடா்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனா். இந்நிலையில் சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி வட்டத்தில் சமத்துவபுரத்தை திறந்து வைக்க புதன்கிழமை வந்த தமிழக முதல்வா் மு. க ஸ்டாலினை, மக்கள் நலக் கூட்டமைப்பு நிா்வாகிகள் சைபுல்லாஹ் உள்ளிட்டோா் சந்தித்து இளையான்குடியில் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் திட்டத்தை ரத்து செய்து தற்போதுள்ள பேருந்து நிலையத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் என மனு கொடுத்து வலியுறுத்தினா். மனுவை பெற்றுக் கொண்ட முதல்வா் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளதாக கூட்டமைப்பு நிா்வாகிகள் தெரிவித்தனா்.