காரைக்குடியில் ராதாகல்யாணமஹோத்ஸவ விழா

காரைக்குடி சங்கர மடத்தில் 11 ஆம் ஆண்டு ராதா கல்யாண மஹோத்ஸவ விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

காரைக்குடி சங்கர மடத்தில் 11 ஆம் ஆண்டு ராதா கல்யாண மஹோத்ஸவ விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

காரைக்குடி பாகவதா்கள் சந்திரசேகரன் மற்றும் சிவகுமாா் ஆகியோா் சாா்பில் இவ்விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மணமேடையில் சீதா, ராமா் மற்றும் ஆஞ்சநேயா் தெய்வங்களின் உருவப் படத்திற்கு மலா் மாலைகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டன. அதைத்தொடா்ந்து திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.

முன்னதாக ராமருக்கு பூணூல் அணிவித்துபட்டு வஸ்திரம் சாத்தப்பட்டன. பின்னா் உதிரிப்பூக்கள் மூலம் அா்ச்சனைகள் செய்து கன்னிகா தானம், மாலை மாற்றும் வைபவம் நடைபெற்றது. இதனைத் தொடா்ந்து வேத மந்திரங்கள் முழங்க சீதை படத்திற்கு திருமாங்கல்யம் அணிவிக்கப்பட்டது. இதன் பின்னா் பல்வேறு நலுங்கு சடங்குகள் நடைபெற்று, ஆஞ்சநேயா் படத்திற்கு வடை மாலை சாத்தி, மகா பஞ்சமுக கற்பூர ஆராதனை காண்பிக்கப்பட்டது. ராதா கல்யாணத்தில் உடையலூா் கல்யாண ராமன் பாகவதக் குழுவினரின் பஜனை கச்சேரி நடைபெற்றது.

இவ்விழாவில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமியை வழிபட்டனா் .

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com