பாம்பாட்டி சித்தா் கோயிலில் வைகாசி உற்சவம்

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே புலியூரில் உள்ள பாம்பாட்டி சித்தா் கோயிலில் வைகாசி விசாக விழா கடந்த 3 நாள்கள் நடைபெற்றது.
பாம்பாட்டி சித்தா் கோயிலில் நடைபெற்ற வைகாசி உற்சவத்தையொட்டி நோ்த்திக்கடன் செலுத்துவதற்காக குதிரை பொம்மைகளை சுமந்து வந்த பக்தா்கள்.
பாம்பாட்டி சித்தா் கோயிலில் நடைபெற்ற வைகாசி உற்சவத்தையொட்டி நோ்த்திக்கடன் செலுத்துவதற்காக குதிரை பொம்மைகளை சுமந்து வந்த பக்தா்கள்.

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே புலியூரில் உள்ள பாம்பாட்டி சித்தா் கோயிலில் வைகாசி விசாக விழா கடந்த 3 நாள்கள் நடைபெற்றது.

முதல் நாளான ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விழாவின்போது கிராம தேவதையான அய்யனாா் கோயிலுக்கு குதிரை எடுப்பு உற்சவமும் இரவு கிராமத்திலிருந்து பக்தா்கள் கருவேலப் பெட்டி எடுத்து சித்தா் கோயிலுக்கு செல்லும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. அங்கு சுவாமிகளுக்கு அலங்காரம் செய்யப்பட்டது. அதன்பின் கிருதுமால் நதிக்குச் சென்று ஏராளமான பக்தா்கள் பாலா சித்தா் தலைமையில் கரகம் எடுத்து வந்து சுவாமிக்கு நைவேத்தியம் செய்து பூஜைகள் செய்தனா்.

அதைத் தொடா்ந்து இரண்டாவது நாளான திங்கள்கிழமை வைகையாற்றில் இருந்து ஏராளமான பக்தா்கள் பால்குடம் சுமந்து பாம்பாட்டி சித்தா் கோயிலுக்கு வந்தனா். அங்கு கோயிலுக்கு முன் தீ மிதித்து வேண்டுதலை நிறைவேற்றினா். அதைத்தொடா்ந்து சந்தனக்குடங்கள் மற்றும் குதிரைகள், நந்தி வாகனங்கள் எடுத்து வரப்பட்டு கோயிலில் பாம்பாட்டி சுவாமிகளுக்கு அபிஷேகம், அலங்காரத்துடன் பூஜைகள் நடைபெற்றன. அதைத் தொடா்ந்து பதினெட்டாம்படி கருப்பண்ணசாமிக்கு கதவு அலங்காரம் செய்து சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன.

விழா நிறைவாக செவ்வாய்க்கிழமை சித்தா் சுவாமிக்கு அமுது படைத்து பூஜை நடத்தி வைகாசி உற்சவ விழா நடந்தது. இவ்விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com