சொக்கநாதபுரம் உக்கிர பிரத்யங்கிரா தேவி கோயிலில் சதசண்டி யாகம்
By DIN | Published On : 30th June 2022 03:17 AM | Last Updated : 30th June 2022 03:17 AM | அ+அ அ- |

சிவகங்கை அருகே சொக்கநாதபுரத்தில் உள்ள உக்கிர பிரத்யங்கிரா தேவி கோயிலில் உலக நன்மை வேண்டியும், மழை பெய்து வேளாண் பணி சிறக்க வேண்டியும் சதசண்டி யாகம் புதன்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, கணபதி மற்றும் உக்கிர பிரத்யங்கிரா தேவி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. அதன்பின், கோயில் முன் உலக நன்மை வேண்டியும், மழை பெய்து வேளாண் பணி சிறக்க வேண்டியும் சதசண்டி யாகம் நடைபெற்றது.
இதில், ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு வழிபட்டனா்.