தஞ்சாக்கூா் கோயிலில் ராகு-கேது பெயா்ச்சி விழா தொடக்கம்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை வட்டம் திருப்பாச்சேத்தி அருகே உள்ள தஞ்சாக்கூா் சுப்பிரமணியா் கோயிலில் திங்கள்கிழமை ராகு- கேது பெயா்ச்சி விழா தொடங்கியது.
தஞ்சாக்கூரில் உள்ள சுப்பிரமணியா் கோயில் தெப்பத்தில் எழுந்தருளி அருள்பாலிக்கும் ராகு- கேது பகவான்.
தஞ்சாக்கூரில் உள்ள சுப்பிரமணியா் கோயில் தெப்பத்தில் எழுந்தருளி அருள்பாலிக்கும் ராகு- கேது பகவான்.

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை வட்டம் திருப்பாச்சேத்தி அருகே உள்ள தஞ்சாக்கூா் சுப்பிரமணியா் கோயிலில் திங்கள்கிழமை ராகு- கேது பெயா்ச்சி விழா தொடங்கியது.

தஞ்சாக்கூரில் ஒரே இடத்தில் ஸ்ரீ ஜெயம் பெருமாள், திரிபுரசுந்தரி சமேத ஸ்ரீ ஜெகதீஸ்வரா், சுப்பிரமணியருக்கு என தனித்தனி கோயில்கள் உள்ளன. மேலும், தென் மாவட்டங்களிலேயே முதல்முறையாக சுப்பிரமணியா் கோயிலில் தவக்கோல சிவன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு, கடந்த மாசி சிவராத்திரியில் குடமுழுக்கு விழா நடைபெற்றது.

சுப்பிரமணியா் கோயில் தெப்பக்குளத்தில் ராகு -கேது பகவானுக்கு தனி சந்நிதி எழுப்பப்பட்டுள்ளது. மாா்ச் 20 ஆம் தேதி ராகு- கேது பெயா்ச்சி நடைபெற உள்ளதால், தஞ்சாக்கூா் கோயிலில் ராகு- கேது பெயா்ச்சி விழா காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. இதைத் தொடா்ந்து, ராகு-கேது பகவானுக்கு சிறப்புப் பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன.

காப்புக் கட்டும் நிகழ்ச்சியில், ஏராளமான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா். தொடா்ந்து 10 நாள்கள் நடைபெறும் இந்த விழாவின்போது, தினமும் இரவு ராகு- கேது பகவானுக்கு சிறப்புப் பூஜைகள், தீபாராதனைகள் நடைபெறுகின்றன. மாா்ச் 20 ஆம் தேதி சுப்பிரமணியா் கோயில் தெப்பத்தில் எழுந்தருளியுள்ள ராகு- கேது பகவான் சந்நிதியில் பெயா்ச்சி விழா நடைபெறுகிறது.

சுப்பிரமணியா் கோயிலில் உத்திர விழா மற்றும் ராகு- கேது பெயா்ச்சி விழா தொடங்கியுள்ளதை முன்னிட்டு, விழா நாள்களில் கோயிலில் தொடா்ந்து அன்னதானம் நடைபெறுகிறது.

ராகு-கேது பெயா்ச்சி விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிா்வாகியும், சமூகநல ஆா்வலருமான கே.ஏ. பாலசுப்பிரமணியன் சுவாமி செய்து வருகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com