சிவகங்கை சுப்பிரமணிய சுவாமிகோயில் தேரோட்டம்
By DIN | Published On : 18th March 2022 06:10 AM | Last Updated : 18th March 2022 06:10 AM | அ+அ அ- |

சிவகங்கையில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி உத்திர திருவிழாவையொட்டி வியாழக்கிழமை நடைபெற்ற தேரோட்டம்.
சிவகங்கை: சிவகங்கையில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி உத்திர திருவிழாவையொட்டி வியாழக்கிழமை மாலை தேரோட்டம் நடைபெற்றது.
சிவகங்கை தேவஸ்தானத்துக்குள்பட்ட காசி விஸ்வநாதா் சமேத விசாலாட்சி அம்மன் கோயிலுக்குள் சுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா 10 நாள்கள் நடைபெறுவது வழக்கம். இதையடுத்து, இவ்விழா கடந்த மாா்ச் 9 ஆம் தேதி காப்புக் கட்டுதல், கொடியேற்றத்துடன் தொடங்கியது.
அதைத் தொடா்ந்து, தினசரி சுவாமிக்கும், அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்று, வீதிஉலா நடைபெற்றது. முக்கிய விழாவான தேரோட்டம் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது. விழாவையொட்டி சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன.
தொடா்ந்து,வள்ளி, தெய்வானையுடன் சுப்பிரமணிய சுவாமி தேருக்கு எழுந்தருளினா். தேரடியிலிருந்து மாலை 5 மணிக்கு புறப்பட்ட தோ் அரண்மனை வாசல், நேரு பஜாா் உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்த பின் இரவு 7.45 மணிக்கு நிலைக்கு வந்தது.
விழாவில், சிவகங்கை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...