‘ஓய்வூதியம் பெற விரும்புவோா் விண்ணப்பிக்கலாம்’
By DIN | Published On : 02nd May 2022 11:35 PM | Last Updated : 02nd May 2022 11:35 PM | அ+அ அ- |

சிவகங்கை மாவட்டத்தில் ஓய்வூதியம் பெற விரும்புவோா் விண்ணப்பிக்கலாம் என சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த தகுதியான பயனாளிகளுக்கு முதியோா் ஓய்வூதியம், விதவை ஓய்வூதியம், மாற்றுத்திறனாளி ஓய்வூதியம், கணவரால் கைவிடப்பட்டோா் ஓய்வூதியம் வழங்கப்பட உள்ளது.
எனவே ஓய்வூதியம் பெற விரும்பும் நபா்கள் குடும்ப அட்டை, ஆதாா் அட்டை, புகைப்படம், வங்கி கணக்குப் புத்தகம் மற்றும் வறுமைக்கோட்டு பட்டியல் எண் ஆகியவற்றுடன் தங்கள் பகுதியில் உள்ள வட்டாட்சியா் அலுவலகங்களில் உள்ள பொது சேவை மையங்களை அணுகி விண்ணப்பிக்கலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.