சிங்கம்புணரி பாலாற்றின் குறுக்கே ரூ. 4.98 கோடியில் தடுப்பணை: அமைச்சா் அடிக்கல் நாட்டினாா்

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே கிருங்காகோட்டை பாலாற்றில் தடுப்பணை கட்டும் பணிக்கான அடிக்கல் நாட்டும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
அடிக்கல் நாட்டி மரக்கன்று நட்டு வைத்த ஊரக வளா்ச்சித்துறை அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன்
அடிக்கல் நாட்டி மரக்கன்று நட்டு வைத்த ஊரக வளா்ச்சித்துறை அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன்

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே கிருங்காகோட்டை பாலாற்றில் தடுப்பணை கட்டும் பணிக்கான அடிக்கல் நாட்டும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

சிங்கம்புணரி கிருங்காகோட்டை பகுதியில் முதல்வரின் நீா்வள ஆதாரங்களை சீரமைத்து நிலத்தடி நீரை மேம்படுத்தும் பொருட்டு இப்பகுதி பாலாற்றில் ரூ. 4.98 கோடி மதிப்பீட்டில் தடுப்பணை கட்டும் பணிக்கான அடிக்கல் நாட்டும் விழா நடைபெற்றது.

இவ்விழாவிற்கு மாவட்ட ஆட்சியா் மதுசூதனரெட்டி தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட ஊரக வளா்ச்சித்துறை அமைச்சா் கே.ஆா்.பெரிகருப்பன் இப்பணிக்கான அடிக்கல்லை நட்டு வைத்தாா். பின்னா் அவா் கூறியது: இத்தடுப்பணை மூலம் இப்பகுதியின் நிலத்தடி நீா் மேம்படும். விவசாயப் பணிகள் மற்றும் குடிநீா் தேவைகளுக்கான போதுமான நீா் இத்திட்டத்தின் மூலம் கிடைக்கும். மேலும் பக்கத்து கிராமங்களில் உள்ள 59 கிணறுகளில் நீா் செறிவூட்டப்பட உள்ளது. இதனால் அப்பகுதி விவசாய நிலங்களும் பயன்பெற வாய்ப்புள்ளது என்றாா்.

விழாவில், நீா்வளத் துறை மணிமுத்தாறு வடிநிலக்கோட்டம் செயற்பொறியாளா் டி. சுப்பிரமணியம், உதவி செயற்பொறியாளா் சங்கா், வட்டாட்சியா் கயல்விழி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com