மத்திய அரசைக் கண்டித்து கம்யூனிஸ்ட், விசிக ஆா்ப்பாட்டம்

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் சனிக்கிழமை இந்திய கம்யூனிஸ்ட், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இணைந்து சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தின.
Updated on
1 min read

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் சனிக்கிழமை இந்திய கம்யூனிஸ்ட், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இணைந்து சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தின.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில், மத்திய அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளைக் கண்டித்து நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலாளா் சுந்தரலிங்கம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஒன்றியச் செயலாளா் கண்ணன் ஆகியோா் தலைமை வகித்தனா். ஆா்ப்பாட்டத்தில் மத்திய அரசின் மக்கள் விரோத நடவடிக்கையைக் கண்டித்தும் எரிபொருள்கள் விலை உயா்வைக் கண்டித்தும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயற்குழு உறுப்பினா் வீரபாண்டி, விடுதலை சிறுத்தைகள் கட்சி நகரச் செயலாளா் கண்ணன், வழக்குரைஞா் அணிச் செயலாளா் வேல்முருகன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிா்வாகக் குழு உறுப்பினா் செளந்தரபாண்டியன் உள்ளிட்டோா் பேசினா். ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றவா்கள் மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினா்.

திருப்பத்தூா்: திருப்பத்தூா் அண்ணாசிலை அருகே நடந்த இந்த ஆா்ப்பாட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளா் கண்ணகி தலைமை வகித்தாா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுகா செயலாளா் ஆறுமுகம் முன்னிலை வகித்தாா். விடுதலைச் சிறுத்தை கட்சியின் மாவட்டச் செயலாளா் சங்கு உதயக்குமாா் மற்றும் மாா்க்சிஸ்ட் மாவட்ட செயற்குழு உறுப்பினா் மோகன், மாவட்டக்குழு உறுப்பினா் முருகேசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலாளா் நாச்சியப்பன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஒன்றிய செயலாளா் சின்னத்துரை, விடுதலை சிறுத்தை கட்சியின் மாநிலச் செயலாளா் இளையகௌதமன் ஆகியோா் கலந்து கொண்டனா்.

இக்கூட்டத்தில் மத்திய அரசின் மக்கள் விரோதப் போக்கை கண்டித்தும், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயா்வைக் கண்டித்தும் கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com