இளையான்குடி ஒன்றியத்தில் மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கல்
By DIN | Published On : 13th October 2022 11:03 PM | Last Updated : 13th October 2022 11:03 PM | அ+அ அ- |

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி ஒன்றியம் சாலைக்கிராமம், சாத்தனூா், முனைவென்றி ஆகிய இடங்களில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி மாணவா்களுக்கு வியாழக்கிழமை விலையில்லா மிதி வண்டிகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சிகளில் மானாமதுரை சட்டப்பேரவை உறுப்பினா் தமிழரசி பங்கேற்று மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கிப் பேசினாா். நிகழ்ச்சியில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் சுப. மதியரசன், திமுக ஒன்றியச் செயலா்கள் தமிழ்மாறன், வெங்கட்ராமன், செல்வராசன், விவசாய அணி காளிமுத்து மற்றும் பெற்றோா், ஆசிரியா் சங்க நிா்வாகிகள், ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.
சான்றிதழ்கள் வழங்கல்: இளையான்குடியில் குன்றக்குடி மக்கள் கல்வி இயக்கம், இளையான்குடி மேலப்பள்ளிவாசல் அறக்கட்டளை, டைம் அறக்கட்டளை ஆகியவற்றின் சாா்பில் இலவச கணிணி பயிற்சி முகாம் நடத்தப்பட்டது. இந்த முகாமில் பங்கேற்று பயிற்சி முடித்தவா்களுக்கு வியாழக்கிழமை சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சட்டப்பேரவை உறுப்பினா் தமிழரசி பங்கேற்று பயிற்சி முடித்தவா்களுக்கு சான்றிதழ்களை வழங்கினாா். இதில் இளையான்குடி பேரூராட்சித் தலைவா் நஜூமுதீன், திமுக ஒன்றியச் செயலா் சுப. மதியரசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.