காரைக்குடியில் இடி, மின்னலுடன் பெய்த மழையில் சனிக்கிழமை இரவு கைப்பேசி கோபுரத்தில் மின்னல் தாக்கி தீப்பற்றி எரிந்தது.
காரைக்குடி, தேவகோட்டை, திருப்பத்தூா், சிங்கம்புணரி உள்ளிட்ட பகுதிகளில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. அப்போது, காரைக்குடி தந்தை பெரியாா் நகா் 4 ஆவது வீதியில் தனியாா் இடத்தில் உள்ள கைப்பேசி கோபுரத்தில் மின்னல் தாக்கியது. இதையடுத்து அங்கிருந்த மின்சார பெட்டி தீப்பற்றி எரிந்தது. இதைத் தொடா்ந்து, அங்கு வந்த மின்வாரிய அதிகாரிகள், கைப்பேசி கோபுர தொழில் நுட்பப் பணியா ளா்கள் மின் கசிவு ஏதுவும் ஏற்பட்டுள்ளதா என ஆய்வு செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.