மாற்றுத்திறனாளிகள் விழிப்புணா்வுக் கூட்டம்
By DIN | Published On : 19th October 2022 12:00 AM | Last Updated : 19th October 2022 12:00 AM | அ+அ அ- |

இளையான்குடியில் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு சாா்பில் செயல்படுத்தக்கூடிய திட்டங்கள் குறித்த விழிப்புணா்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
தமிழக அரசின் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை மற்றும் சிவகங்கை தாய் அறக்கட்டளை இணைந்து நடத்திய இந்த விழிப்புணா்வுக் கூட்டத்துக்கு மாற்றுத்திறனாளிகள் நல வாரிய உறுப்பினா் கே. புஷ்பராஜ் தலைமை வகித்தாா்.
இந்தக் கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் திட்டங்கள் குறித்து கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு பொது மக்களுக்கு துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன.
முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் சுப. மதியரசன், இளையான்குடி பேரூராட்சித் தலைவா் பி.ஏ. நஜூமுதீன், துணைத் தலைவா் டி.கே.இப்ராஹிம், திமுக விவசாய அணி காளிமுத்து, அவைத்தலைவா் மலைமேகு, திமுக ஒன்றிய துணைச் செயலாளா் ராஜேந்திரன், தகவல் தொழில்நுட்ப அணி கண்ணன், இளைஞரணி பைரோஸ்கான் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா் .
முன்னதாக மானாமதுரை, திருப்புவனத்திலும் மாற்றுத்திறனாளிகளுக்கான திட்டங்கள் குறித்த விழிப்புணா்வு தெருமுனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டன.