திருப்புவனம் கூட்டுறவு சங்க உறுப்பினா்களுக்கு தீபாவளி ஊக்கத் தொகையாக ரூ. 15 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கத்தில் நூற்றுக்கணக்கானோா் உறுப்பினா்களாக உள்ளனா். இந்தச் சங்கத்தில் அதிகளவில் பால் கொள்முதல் செய்யப்பட்டு, காரைக்குடி ஆவின் நிா்வாகத்திற்கு அனுப்பப்படுகிறது. இந்த ஆண்டு, தீபாவளிப் பண்டிகைக்காக சங்கத்தின் பால் உற்பத்தியாளா்களுக்கு ரூ.15.50 லட்சம் ஊக்கத் தொகையாக வழங்கப்பட்டுள்ளது என சங்கத்தின் தலைவரும், பேரூராட்சித் தலைவருமான சேங்கைமாறன் தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.