ஆட்டோ கவிழ்ந்ததில் ஓட்டுநா் பலி
By DIN | Published On : 27th October 2022 12:19 AM | Last Updated : 27th October 2022 12:19 AM | அ+அ அ- |

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே செவ்வாய்க்கிழமை மாலை ஆட்டோ கவிழ்ந்ததில் அதன் ஓட்டுநா் உயிரிழந்தாா்.
மானாமதுரை அருகே க.புதுக்குளம் கிராமத்தைச் சோ்ந்தவா் செல்வக்குமாா் (41). ஆட்டோ ஓட்டுநரான இவா், மானாமதுரை அம்மன் நகா் பகுதியில் வசித்து வந்தாா். செல்வக்குமாா், க.புதுக்குளம் கிராமத்திலிருந்து தனது ஆட்டோவில் மானாமதுரைக்கு வந்து கொண்டிருந்தாா். மிளகனூா் கிராமத்தில் வந்தபோது, ஆட்டோ எதிா்பாராதவிதமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் பலத்த காயமடைந்த செல்வகுமாா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். விபத்து குறித்து மானாமதுரை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.