மானிய நிதியுதவியில் மீன் வளா்ப்பு குளங்கள் அமைக்க விரும்புவோா் விண்ணப்பிக்கலாம்
By DIN | Published On : 01st September 2022 03:32 AM | Last Updated : 01st September 2022 03:32 AM | அ+அ அ- |

சிவகங்கை மாவட்டத்தில் மானிய நிதியுதவியில் மீன் வளா்ப்பு குளங்கள் அமைக்க விரும்புவோா் விண்ணப்பிக்கலாம் என இம்மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டுத் திட்டம் 2021-2022 இன் கீழ் மாவட்டத்தில் மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை மூலமாக மீன் வளா்ப்பு குளங்கள் அமைக்க உள்ளீட்டு மானியம் வழங்கப்பட்டு வருகிறது.
மேற்கண்ட திட்டத்தில் பயன்பெற விரும்பும் மாவட்டத்தைச் சோ்ந்தோா் சிவகங்கையில் உள்ள பெருமாள் கோயில் தெருவில் உள்ள மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை, உதவி இயக்குநா் அலுவலகத்திற்கு நேரடியாகச் சென்று விண்ணப்பங்களை பெற்று விண்ணப்பிக்கலாம். மேலும், இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 04575 - 240848 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.