திருப்பத்தூரில் இரட்டை மாட்டுவண்டிப் பந்தயம்
By DIN | Published On : 08th September 2022 10:57 PM | Last Updated : 08th September 2022 10:57 PM | அ+அ அ- |

திருப்பத்தூா் கல்வெட்டுமேடு பகுதியில் உள்ள செல்வவிநாயகா், முனீஸ்வரா் ஆலய 24 ஆம் ஆண்டு வருடாபிஷேகத்தையொட்டி வியாழக்கிமைம இரட்டை மாட்டு வண்டிப் பந்தயம் நடைபெற்றது.
இப்பந்தம் 2 பிரிவுகளாக நடத்தப்பட்டது. பெரியமாட்டுப் பிரிவில் 7 ஜோடிகளும், சின்னமாட்டுப் பிரிவில் 12 ஜோடிகளும் கலந்து கொண்டன. இதில் பெரியமாட்டுப் பிரிவில் பரளி ஈலக்குடிப்பட்டி கணேசன்யாழினி முதலிடத்தையும், கூடலூா் பாலாா்பட்டி ஜெகதீஷ் 2ஆம் இடத்தையும், துலையனூா் பாஸ்கரன் 3 ஆம் இடத்தையும், குண்டேந்தல்பட்டி நவநீதன்சகாதேவன் ஆகியோரது மாடுகள் 4 ஆம் இடத்தையும் பெற்றன. சின்னமாட்டுப் பிரிவில் சாந்திக்கோட்டை கருப்பையா முதலிடத்தையும், விராமதி செல்வமணி 2 ஆம் இடத்தையும், எஸ்.எஸ்.கோட்டை சுப்பு 3 ஆம் இடத்தையும், குயில்தேவா் 4 ஆம் இடத்தையும் வென்றனா். வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளா்களுக்குப் பரிசும் கோப்பையும் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கல்வெட்டுமேடு விழாக் குழுவினா் செய்திருந்தனா்.