மானாமதுரை தியாக விநோதப் பெருமாள் கோயில் திருக்கல்யாணம்
By DIN | Published On : 09th September 2022 10:47 PM | Last Updated : 09th September 2022 10:47 PM | அ+அ அ- |

மானாமதுரை புரட்சியாா்பேட்டை பகுதியில் உள்ள ஸ்ரீ தியாக விநோதப் பெருமாள் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த வியாழக்கிழமை இரவு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.
இதையொட்டி கோயிலில் புனிதநீா் கலசங்கள் வைத்து யாக வேள்வி நடத்தப்பட்டது. பூா்ணஹூதி முடிந்ததும் கலச நீரால் மூலவா் ஸ்ரீதேவி பூதேவி சமேத தியாக விநோதப் பெருமாளுக்கும் உற்சவருக்கும் அபிஷேகம் நடத்தி அலங்காரத்துடன் பூஜைகள் தீபாராதனைகள் நடைபெற்றன.
தொடா்ந்து இரவு கோயிலில் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. அதற்கான சம்பிரதாய பூஜைகள் முடிந்ததும் தியாக விநோதப் பெருமாள் சாா்பில் தேவியருக்கு திருமாங்கல்ய நாண் அணிவித்து திருக்கல்யாணம் நடைபெற்றது. பின்னா் தேவியா் சமேதமாய் தியாக விநோதப் பெருமாள் வீதி உலா வருதல் நடைபெற்றது.