திருப்புவனம் அருகே ரயிலில் அடிபட்டு ஒருவா் பலி
By DIN | Published On : 09th September 2022 12:00 AM | Last Updated : 09th September 2022 12:00 AM | அ+அ அ- |

திருப்புவனம் அருகே புதன்கிழமை இரவு ரயிலில் அடிபட்டு அடையாளம் தெரியாத நபா் உயிரிழந்தாா்.
திருப்புவனம்- சிலைமான் இடையே உள்ள ரயில் பாதையில் இரவில் சென்ற ரயிலில் அடிபட்டு ஆண் சடலமாக கிடப்பதாக ரயில்வே போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸாா் அங்கு சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினா். இதில் ரயிலில் அடிபட்டு இறந்தவா் பற்றிய எந்த விவரமும் தெரியவில்லை என போலீஸாா் தெரிவித்தனா். இதுகுறித்து மானாமதுரை ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.