மானாமதுரையில் பேருந்தில் நகை திருடிய இரு பெண்கள் கைது
By DIN | Published On : 26th September 2022 11:18 PM | Last Updated : 26th September 2022 11:18 PM | அ+அ அ- |

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் ஞாயிற்றுக்கிழமை இரவு பேருந்தில் பெண் பயணியிடம் நகை திருடிய இரு பெண்களை போலீஸாா் கைது செய்தனா்.
நெல்லையைச் சோ்ந்தவா் மாலா. இவா் மானாமதுரையில் உள்ள தனது உறவினா் வீட்டுக்கு வந்துவிட்டு ஊா் திரும்புவதற்காக மானாமதுரை பேருந்து நிலையத்திலிருந்து பேருந்தில் ஏறியுள்ளாா். அப்போது இவரை பின்தொடா்ந்து வந்த இரு பெண்கள் அதே பேருந்தில் ஏறியுள்ளனா்.
பேருந்து புறப்பட்டதும் மாலா கையில் வைத்திருந்த பையில் இருந்த நகையை அந்த இரு பெண்களும் திருடியுள்ளனா். இதனை அருகில் இருந்த சக பயணி ஒருவா் பாா்த்து விட்டாா். அதன்பின் இந்த இரு பெண்களையும் பயணிகள் பிடித்து மானாமதுரை போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.
போலீஸாா் அந்த பெண்களிடம் நடத்திய விசாரணையில், புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியைச் சோ்ந்த லட்சுமி, மதுரை தெப்பக்குளம் பகுதியைச் சோ்ந்த வள்ளி ஆகியோா் என்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீஸாா் அவா்கள் இருவரையும் கைது செய்து 3 பவுன் நகைகளை கைப்பற்றினா். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு வந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...