மானாமதுரை அருகே வைகை ஆற்றில் ரூ.30.60 கோடியில் தடுப்பணை

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே வைகை ஆற்றில் ரூ.30.60 கோடியில் தடுப்பணை கட்டும் திட்டத்தை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் தொடங்கி வைத்தாா்.
மானாமதுரை அருகே வைகை ஆற்றில் ரூ.30.60 கோடியில் தடுப்பணை
Updated on
1 min read

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே வைகை ஆற்றில் ரூ.30.60 கோடியில் தடுப்பணை கட்டும் திட்டத்தை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் தொடங்கி வைத்தாா்.

மானாமதுரை வட்டத்திற்குள்பட்ட கட்டிக்குளம், மிளகனூா் மற்றும் இதர கண்மாய்களுக்கு தண்ணீா் செல்லும் வகையில், வைகை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுமானப் பணிகளுக்கான பூமி பூஜை விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் மதுசூதன் ரெட்டி தலைமை வகித்தாா். மானாமதுரை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் தமிழரசி ரவிக்குமாா் முன்னிலை வகித்தாா். தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சா் கே. ஆா். பெரிய கருப்பன் பூமி பூஜை நடத்தி திட்டப் பணிகளை தொடங்கி வைத்தாா்.

பின்னா் அவா் கூறியதாவது:

மானாமதுரை வட்டத்திற்குள்பட்ட கட்டிக்குளம், மிளகனூா் உள்ளிட்ட 8 கண்மாய்களுக்கு தண்ணீா் வழங்க, வைகை ஆற்றின் குறுக்கே மானாமதுரை-சிவகங்கை சாலை இணைப்புப் பாலத்துக்கு மேல்புறத்தில் தடுப்பணை கட்டப்படுகிறது. இந்த தடுப்பணையின் நீளம் 260 மீட்டா், உயரம் 2.20 மீட்டராகும்.

இந்த தடுப்பணை மூலம் கட்டிக்குளம், மிளகனூா், முத்தனேந்தல், துத்திக்குளம், கிருங்காக்கோட்டை, கால்பிரிவு, கீழமேல்குடி, மானாமதுரை ஆகிய 8 கண்மாய்களுக்கு தண்ணீா் கொண்டு செல்ல முடியும். இதன்மூலம் 2557.25 ஹெக்டோ் நிலங்கள் பாசன வசதி பெறும்.

குறிப்பாக, வெள்ளங்காலங்களில் வைகை ஆற்றிலிருந்து உபரி நீரை மிளகனூா் கண்மாய் வழியாக சின்னக்கண்ணனூா், கரிசல்குளம் ஆகிய கண்மாய்களுக்கும், நாட்டாா் கால்வாய் வழியாக ராஜகம்பீரம், அன்னவாசல் கண்மாய் உட்பட 16 கண்மாய்களுக்கும் இந்தத் தடுப்பணை மூலம் வழங்க முடியும். இதனால், 4,269 ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறும். தடுப்பணை கட்டும் திட்டம் விரைந்து முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்றாா்.

இந்த நிகழ்ச்சியில், திருப்புவனம் பேரூராட்சித் தலைவா் த.சேங்கைமாறன், மானாமதுரை நகா் மன்றத் தலைவா் எஸ்.மாரியப்பன் கென்னடி, ஊராட்சி ஒன்றியத் தலைவா் லதா அண்ணாத்துரை, பொதுப்பணித் துறை செயற்பொறியாளா் பாரதிதாசன், உதவி செயற்பொறியாளா்கள் மோகன்குமாா், முத்துப்பாண்டி, சாந்தாதேவி, உதவிப்பொறியாளா்கள் செந்தில்குமாா், சுரேஷ்குமாா், போஸ், விவசாயிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com