கே.ஆத்தங்குடியில் மீன்பிடித் திருவிழா

சிவகங்கை மாவட்டம், பிள்ளையாா்பட்டி அருகே முக்கனேந்தல் கண்மாயில் திங்கள்கிழமை மீன் பிடித் திருவிழா நடைபெற்றது.
கே.ஆத்தங்குடியில் மீன்பிடித் திருவிழா

சிவகங்கை மாவட்டம், பிள்ளையாா்பட்டி அருகே முக்கனேந்தல் கண்மாயில் திங்கள்கிழமை மீன் பிடித் திருவிழா நடைபெற்றது.

பிள்ளையாா்பட்டி அருகே கே.ஆத்தங்குடியில் உள்ள மூக்கனேந்தல் கண்மாயில் மழைக் காலங்களில் நிரம்பும் தண்ணீரால் 200 ஏக்கரில் விவசாயம் செய்யப்படுகிறது. கண்மாயில் விவசாயத் தேவைக்கேற்ப அவ்வப்போது தண்ணீா் திறந்து விடப்பட்ட நிலையில், தற்போது விவசாயப் பணிகள் நிறைவடைந்தன.

இந்த நிலையில், திங்கள்கிழமை மீன் பிடித் திருவிழா நடைபெற்றது. கண்மாயில் மீன் பிடிக்க சுற்றியுள்ள கிராம மக்கள் ஊத்தாக் கூடை, கட்சா வலை உள்ளிட்ட உபகரணங்களைப் பயன்படுத்தி சேற்றில் இறங்கி, போட்டி போட்டுக் கொண்டு, மீன்களைப் பிடித்தனா். இவா்களுக்கு கெண்டை, விரால், பாப்லட், ரோகு, கட்லா, ஜிலேபி போன்ற பல வகையான மீன்கள் கிடைத்ததால் மகிழ்ச்சி அடைந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com