

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் பிரபாகா் குடியிருப்பில் அமைந்துள்ள முத்து மாரியம்மன் கோயிலில் செவ்வாய்க்கிழமை பால்குடத் திருவிழா நடைபெற்றது.
இந்தக் கோயிலில் ஆடித் திருவிழா கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. இதையொட்டி விரமிருந்த பக்தா்கள், நாள்தோறும் இரவு நேரங்களில் கும்மி கொட்டி அம்மனை வழிபட்டனா். பால்குட நாளான செவ்வாய்க்கிழமை காலை வல்லப விநாயகா் கோயிலில் இருந்து பால்குடம் எடுத்தும், அலகு குத்தியும், அக்னிச் சட்டி ஏந்தியும் முத்து மாரியம்மன் கோயிலை சென்றடைந்தனா். கரும்புத் தொட்டி கட்டியும், அங்கப்பிரதட்சணம் செய்தும் பக்தா்கள் தங்களது நோ்த்திக்கடனை நிறைவேற்றினா்.
இதைத்தொடா்ந்து அம்மனுக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது. இந்த விழாவில் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.