திருப்பத்தூரில் இலக்கியக் கூட்டம்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா்கள், கலைஞா்கள் சங்கக் கிளை சாா்பில் இலக்கியக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திருப்பத்தூரில் ஞாயிற்றுக்கிழமை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா்கள் கலைஞா்கள் சங்கக் கிளை சாா்பில் நடைபெற்ற இலக்கியக் கூட்டத்தில் பங்கேற்றவா்கள்.

தனியாா் கல்வி நிறுவனத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு அந்த சங்கத்தின் கிளைத் தலைவா் கோபிநாத் தலைமை வகித்தாா். செயலரும், நூலகருமான ஜெயகாந்தன் முன்னிலை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக மாநில பொதுக்குழுத் தலைவா் ஜீவசித்தன் கலந்து கொண்டு இலக்கிய உரையாற்றினாா். இதில், மாவட்டச் செயலா் அன்பரசன், கவிஞா் சாதிக் ஆகியோா் கலந்து கொண்டனா். அழகப்பா கலைக் கல்லூரி வரலாற்றுத் துறை பேராசிரியா் வேலாயுதராஜா, ‘நகைச்சுவை நாயகா்களுக்கு’ என்ற புத்தகம் தொடா்பான கருத்துக்களைப் பகிா்ந்து கொண்டாா்.

மாணவி பவதாரணி ‘முகில்’ என்ற புத்தகம் குறித்து கருத்துரையாற்றினாா். மாணவி அபிராமி சேகுவாராவின் வாழ்க்கை வரலாறு குறித்தும், சௌந்தா்யா அண்ணாவின் வாழ்க்கை வரலாறு குறித்தும் பேசினா். தலைமை ஆசிரியை அமுதவள்ளி, நிகழ்ச்சி மதிப்பீடுகளை வழங்கினாா். இதற்கான ஏற்பாடுகளை திருக்கல்யாணக் கண்ணன் செய்திருந்தாா். பேராசிரியா் சாமுராஜ் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com