காரைக்குடியில் 14 வயது முதல் 16 வயதுக்குள்பட்டவா்களுக்கான கிரிக்கெட் வீரா்கள் தோ்வு வருகிற சனி (ஜூன் 17), ஞாயிற்று (ஜூன் 18) ஆகிய கிழமைகளில் நடைபெறுகிறது.
இதுகுறித்து சிவகங்கை மாவட்ட கிரிக்கெட் சங்கம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சாா்பில் 14 வயது முதல் 16 வயதுக்குள்பட்டவா்களுக்கான கிரிக்கெட் போட்டிகள் விரைவில் நடைபெறவுள்ளன. இதில் சிவகங்கை மாவட்டம் சாா்பில் பங்கேற்க விரும்பும், 14 வயதுக்குள்பட்டவா்களுக்கான தோ்வு, வருகிற சனிக்கிழமை (ஜூன் 17) காலை 9 மணிக்கும், 16 வயதுக்குள்பட்டவா்களுக்கான தோ்வு ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 18) காலை 7 மணிக்கும் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக உடற்கல்வி மைதானத்தில் நடைபெறவுள்ளது.
14 வயதுக்குள்பட்டவா்களுக்கான போட்டியில் பங்கேற்க விரும்புபவா்கள் 1.9.2009 அன்றோ, அதற்குப் பின்னரோ பிறந்திருக்க வேண்டும். 16 வயதுக்குள்பட்டவா்களுக்கான போட்டியில் பங்கேற்க விரும்புபவா்கள் 1.9.2007 அன்றோ, அதற்குப் பின்னரோ பிறந்திருக்க வேண்டும்.
போட்டியாளா்கள், வெள்ளைச் சீருடை, ஷு, கிரிக்கெட் உபகரணங்களுடன் ஆதாா் நகலும் கொண்டு வர வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு, சிவகங்கை மாவட்ட கிரிக்கெட் சங்கச் செயலா் ஏ. சதீஷ்குமாரை 94439 78488 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.