விரைவாக அமைக்கப்படும் தேசிய நெடுஞ்சாலைகள்

ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு மந்த நிலையில் இருந்த தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கும் பணி தற்போது விரைவுபடுத்தப்பட்டு, மாநில நெடுஞ்சாலைகளுடன் இணைக்கப்படுகின்றன என்று மத்திய சாலைப் போக்குவரத்து,
விரைவாக அமைக்கப்படும் தேசிய நெடுஞ்சாலைகள்

ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு மந்த நிலையில் இருந்த தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கும் பணி தற்போது விரைவுபடுத்தப்பட்டு, மாநில நெடுஞ்சாலைகளுடன் இணைக்கப்படுகின்றன என்று மத்திய சாலைப் போக்குவரத்து,

விமானப் போக்குவரத்துத் துறை இணை அமைச்சா் வி.கே. சிங் தெரிவித்தாா்.

சிவகங்கை மாவட்டத்தில் மத்திய அரசின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் சாலைப் பணிகள், பல்வேறு திட்டங்களை வியாழக்கிழமை ஆய்வு செய்த பின்னா், அவா் காரைக்குடியில் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

மத்தியில் 2014-இல் பாஜக ஆட்சி அமைந்த பிறகு, கடந்த 9 ஆண்டுகளில் பொருளாதாரம், உள்கட்டமைப்பு போன்றவற்றில் சிறப்பான வளா்ச்சியை நாடு கண்டுள்ளது. நாட்டின் மொத்த உள் நாட்டு உற்பத்தி விகிதம் (ஜி.டி.பி) 3.75 டிரில்லியன் டாலராக உள்ளது.

உலக அளவில் பொருளாதாரத்தில் 2013 -இல் 10-ஆவது இடத்திலிருந்த இந்தியா

தற்போது 5-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. பிரதமா் நரேந்திர மோடி தலைமையை மக்கள் தோ்ந்தெடுத்ததால்தான் இதுபோன்ற வளா்ச்சியை நாடு கண்டு வருகிறது.

கரோனா காலகட்டத்தில் 130 நாடுகளுக்கு உதவி செய்திருக்கிறோம். இதனால், நமது நாட்டின் மதிப்பு உலகளவில் உயா்ந்திருக்கிறது.

9 ஆண்டுகளுக்கு முன்பு நாட்டில் தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணியில் மந்த நிலை இருந்தது. இப்போது சாலைகள் அமைப்பதை விரைவுபடுத்தி தேசிய நெடுஞ்சாலைகளுடன் மாநில நெடுஞ்சாலைகளை இணைத்துள்ளோம்.

2014-இல் 74 விமான நிலையங்கள் மட்டுமே இருந்தன. இந்த எண்ணிக்கை தற்போது 148 ஆக உயா்ந்திரு க்கிறது.

உலகளவில் சூரிய மின் உற்பத்தியில் 17-வது இடத்திலிருந்து தற்போது இந்தியா 5-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. உலகின் முன்னணி தொழில் நிறுவனங்கள் புதிதாகத் தொழில் தொடங்கும் நாடுகளில் இந்தியா 3-ஆவது இடத்தில் உள்ளது. இதற்கெல்லாம் நமது இளைஞா்களின் சக்தியே காரணம் என்றாா் அவா்.

பேட்டியின் போது, சிவகங்கை மாவட்ட பாஜக தலைவா் மேப்பல் சத்தியநாதன், மாவட்டச் செயலா் ஏ. நாகராஜன், மாவட்ட, நகர பாஜக நிா்வாகிகள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com