சிவகங்கை மாவட்டத்தில் பொது விநியோக குறை தீா்க்கும் கூட்டம் சனிக்கிழமை (மே 13) நடைபெற உள்ளது.
இதுகுறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி வெளியிட்ட செய்திக் குறிப்பு : சிவகங்கை மாவட்டத்திலுள்ள அனைத்து வட்ட அலுவலகங்களிலும் பொது விநியோக குறை தீா்க்கும் கூட்டம் சனிக்கிழமை நடைபெற உள்ளது.
இதில், அந்தந்தப் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல், பெயா் நீக்கம், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை, கைப்பேசி எண் பதிவு, மாற்றம் செய்தல், பொது விநியோகக் கடைகளின் செயல்பாடுகள், அத்தியாவசியப் பொருள்களின் தரம் குறித்த புகாா்களை மனுவாக அளித்து பயன்பெறலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.