

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் அமைந்துள்ள ஆனந்தவல்லி அம்மன் கோயிலில் நடைபெற்ற நவராத்திரி விழா செவ்வாய்கிழமையுடன் நிறைவடைந்தது.
இந்தக் கோயிலில் நவராத்திரி விழா கடந்த 15-ஆம் தேதி தொடங்கியது. இதையொட்டி, கோயில் முழுவதும் மின்விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டது. கோயிலில் அம்மன் சந்நிதியில் கொலு அலங்காரம் வைக்கப்பட்டிருந்தது. விழா நாள்களில் தினமும் உற்சவா் ஆனந்தவல்லி அம்மன் வெவ்வேறு அலங்காரங்களில் எழுந்தருளி அருள்பாலித்தாா்.
மூலவருக்கும் உற்சவருக்கும், கொலுவுக்கும் ஆராதனைகள், பூஜைகள், தீபாரதனைகள் நடைபெற்றன. விழா நாள்களில் திரளான பக்தா்கள் கோயிலுக்கு வந்து அம்மனை தரிசித்தனா்.
மேலும், விழா நாள்களில் கோயிலில் பரதநாட்டியம், ஆன்மிகச் சொற்பொழிவு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நவராத்தி விழாவுக்கான பூஜைகளை ராஜேஷ் பட்டா், குமாா் பட்டா் உள்ளிட்ட சிவாச்சாரியாா்கள் நடத்தி வைத்தனா். தொடந்து 10 நாள்கள் நடைபெற்ற நவராத்தி விழா செவ்வாய்க்கிழமையுடன் நிறைவு பெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.