

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அரசு ஆண்கள், பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
இந்த விழாக்களுக்கு மானாமதுரை சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் தமிழரசி ரவிக்குமாா் தலைமை வகித்து, மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினாா். திருப்புவனம் பேரூராட்சித் தலைவா் த.சேங்கைமாறன், துணைத் தலைவா் ரகமத்துல்லாகான், ஊராட்சி ஒன்றியக்குழுத் துணைத் தலைவா் மூா்த்தி, திமுக ஒன்றியச் செயலா் கடம்பசாமி, நகரச் செயலா் நாகூா்கனி, பள்ளிகளின் தலைமையாசிரியா்கள், ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.