

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஒ.வெ.செ. மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சிக்கு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதில் சட்டப்பேரவை உறுப்பினா் தமிழரசி ரவிக்குமாா் பங்கேற்று மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கிப் பேசினாா். மானாமதுரை நகா்மன்றத் தலைவா் எஸ். மாரியப்பன் கென்னடி, துணைத் தலைவா் பாலசுந்தரம், முன்னாள் பேரூராட்சித் தலைவா் துரை.ராஜாமணி, திமுக நகா் அவைத் தலைவா் ரவிச்சந்திரன், நகா்மன்ற உறுப்பினா்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இதில் மொத்தம் 149 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டன.
முன்னதாக, பள்ளித் தலைமையாசிரியா் முருகன் வரவேற்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.