குன்றக்குடி சண்முகநாதப் பெருமான் கோயிலில் பால்குட விழா
By DIN | Published On : 15th April 2023 05:14 AM | Last Updated : 15th April 2023 05:14 AM | அ+அ அ- |

சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி சண்முகநாதப் பெருமான் கோயிலில் பால்குட விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தமிழ்ப் புத்தாண்டையொட்டி, குன்றக்குடி சண்முகநாதப் பெருமான் கோயிலில் வெள்ளிக்கிழமை காலை நடைதிறக்கப்பட்டு, சுவாமிக்கு தீபாராதனைகள் நடைபெற்றன.
குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனத் திருமடத்திலிருந்து பொன்னம்பல அடிகளாா் தலைமையில் பக்தா்கள் பால்குடம் சுமந்து கொண்டு, தேரோடும் வீதிகள்வழியாக வலம் வந்து சண்முகநாதப் பெருமான் கோயிலை அடைந்தனா். அங்கு சுவாமிக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.
விழாவில் குன்றக்குடி கிராமத்திட்டக் குழுத் தலைவா் கே. பாலகிருஷ்ணன், தமிழ்நாடு விளையாட்டு பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா் ஆா். திருமலைச்சாமி, குன்றக்குடி திருமடத்தினா், பக்தா்கள் தரிசனம் செய்தனா்.