

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே சிறுகூடல்பட்டி பெரியாா் நினைவு சமத்துவபுரத்தில் கலைஞா் சிறுவா் பூங்காவையும், குமாரப்பேட்டையில் கலையரங்கத்தையும் அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன், வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.
இந்த விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் மதுசூதன் ரெட்டி தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்ட கூட்டுறவுத்துறை அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன் சிறுவா் பூங்காவையும், கலையரங்கத்தையும் திறந்து வைத்துப் பேசினாா். இந்த நிகழ்வில், மாவட்ட ஊரக வளா்ச்சித் திட்ட இயக்குநா் இரா. சிவராமன், ஒன்றியக் குழுத் தலைவா் சே. சண்முகவடிவேல், துணைத் தலைவா் வெ. மீனாள், திருப்பத்தூா் பேரூராட்சித் தலைவா் கோகிலாராணி நாராயணன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் அருள்பிரகாசம், இளங்கோ உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.