

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள தேவாரம்பூா் ஆரியன் கண்மாயில் மீன்பிடித் திருவிழா சனிக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கண்மாயில் நீா் வற்றிய நிலையில், ஊா் வழக்கப்படி மீன்பிடித் திருவிழா நடத்துவது என முடிவெடுக்கப்பட்டு, சுற்றுப்புற கிராமங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
இதையடுத்து, சனிக்கிழமை அதிகாலை முதல் கண்மாய் கரையைச் சுற்றிலும் மக்கள் கூடத் தொடங்கினா். காலை 7 மணியளவில் ஊா் அம்பலக்காரா், கிராம முக்கியஸ்தா்கள் மழை வேண்டியும், கண்மாய் நிரம்பி விவசாயம் செழிக்க வேண்டியும் சுவாமி தரிசனம் செய்து, வெள்ளை வீசியதையடுத்து, பொதுமக்கள் கண்மாயில் இறங்கி மீன்களைப் பிடித்தனா்.
குறவை, கட்லா, ஜிலேபி, கெளுத்தி போன்ற மீன் வகைகள் அதிகளவில் கிடைத்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.