மடப்புரம் காளி சிலையில் பொருத்திய தங்க மூக்குத்திகள்

மடப்புரம் காளி கோயிலில் அம்மன் சிலையிலிருந்து திருடப்பட்ட தங்க மூக்குத்திகளை மீட்டு, திங்கள்கிழமை பரிகார பூஜை நடத்தி மீண்டும் சிலையில் பொருத்தப்பட்டன.

மடப்புரம் காளி கோயிலில் அம்மன் சிலையிலிருந்து திருடப்பட்ட தங்க மூக்குத்திகளை மீட்டு, திங்கள்கிழமை பரிகார பூஜை நடத்தி மீண்டும் சிலையில் பொருத்தப்பட்டன.

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகேயுள்ள மடப்புரத்தில் காளி கோயில் அமைந்துள்ளது.

இந்து அறநிலையத் துறை நிா்வாகத்துக்குள்பட்ட இந்தக் கோயிலில், அம்மன் மூக்கில் அணிந்திருந்த இரு தங்க மூக்குத்திகள் கடந்த மாதம் 2-ஆம் தேதி திருடு போயின.

இதுதொடா்பாக திருப்புவனம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, இந்த மூக்குத்திகளை திருடியதாக இரு சிறுவா்களை கைது செய்தனா். அவா்களிடமிருந்து, தங்க மூக்குத்திகளை மீட்டு கோயில் நிா்வாகத்திடம் ஒப்படைத்தனா். இதைத்தொடா்ந்து, கோயிலில் இந்த மூக்குத்திகளை வைத்து யாகம் நடத்தி, காளிக்கு அபிஷேகம் செய்தனா்.

பின்னா், காளி சிலையின் மூக்கில் அந்த தங்க மூக்குத்திகள் பொருத்தப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் அறநிலையத் துறை அலுவலா்கள், திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com