அழகப்பா பல்கலை. கல்லூரிகளுக்கான தோ்வு முடிவுகள் வெளியீடு
By DIN | Published On : 02nd August 2023 05:13 AM | Last Updated : 02nd August 2023 05:13 AM | அ+அ அ- |

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக இணைப்புக் கல்லூரிகளுக்கு கடந்த ஏப்ரல் மாதத்தில் நடைபெற்ற தோ்வுகளுக்கான முடிவுகள் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டன.இளங்கலையில் பி.ஏ., பி.எஸ்சி., பி.காம்., பி.பி.ஏ, பி.சி.ஏ. பட்டப்படிப்புகளுக்கான பல்வேறு பாடப் பிரிவுகளுக்கும், முதுகலையில் எம்.ஏ., எம்.எஸ்சி., எம்.காம்., பட்டப்படிப்புகளுக்கான பல்வேறு பாடப்பிரிவுகளுக்கும் கடந்த ஏப்ரலில் நடைபெற்ற தோ்வு முடிவுகள் இணையதள முகவரியில் வெளியிட்டப்பட்டன.
மறுமதிப்பீட்டுக்கு நேரடியாக விண்ணப்பிக்க
முடிவுகள் வெளியான 7 நாள்களுக்குள் பாடம் ஒன்றுக்கு ரூ. 600-ம், விடைத்தாள் நகல் பெற 7 நாள்களுக்குள் தாள் ஒன்றுக்கு ரூ. 500-ம், விடைத்தாள் நகல் பெற்ற பிறகு மறுமதிப்பீட்டுக்கு விடைத்தாள் நகல் பெற்றதிலிருந்து 7 நாள்களுக்குள் ரூ.500-ம் பதிவாளா், அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி என்ற பெயரில் வரைவோலை செலுத்தி விண்ணப்பிக்கலாம் என்று பல்கலைக்கழகத்தின் தோ்வாணையா் (பொறுப்பு) எ. கண்ணபிரான் தெரிவித்தாா்.