கீழடி அகழாய்வில் செவ்வாய்க்கிழமை கண்டெடுக்கப்பட்ட படிகக் கல்லால் செய்யப்பட்ட எடைக் கல்.
கீழடி அகழாய்வில் செவ்வாய்க்கிழமை கண்டெடுக்கப்பட்ட படிகக் கல்லால் செய்யப்பட்ட எடைக் கல்.

கீழடி அகழாய்வில் எடைக் கல் கண்டெடுப்பு

கீழடி அகழாய்வில் படிகக் கல்லால் செய்யப்பட்ட எடைக் கல் செவ்வாய்க்கிழமை கண்டெடுக்கப்பட்டது.
Published on

மானாமதுரை: கீழடி அகழாய்வில் படிகக் கல்லால் செய்யப்பட்ட எடைக் கல் செவ்வாய்க்கிழமை கண்டெடுக்கப்பட்டது.

சிவகங்கை மாவட்டம், கீழடி தொல்பொருள் அகழாய்வுத் தளத்தில் 9-ஆம் கட்ட அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக தோண்டப்பட்ட ஒரு குழியிலிருந்து 175 செ.மீ. ஆழத்தில் படிகக் கல்லால் செய்யப்பட்ட 2 செ.மீ. விட்டம், 1.5 செ.மீ. உயரம், 8 கிராம் எடைக் கல் கண்டெடுக்கப்பட்டது.

இந்தக் கல்லின் மேல் பகுதி கோள வடிவிலும், அடிப்பகுதி தட்டையாக்கப்பட்டு பளபளப்பாக ஒளிபுகும் தன்மையுடன் காணப்படுகிறது.

மேலும், சுடுமண்ணால் செய்யப்பட்ட வட்டச் சில்லுகள், இரும்பு ஆணி, கருப்பு, சிவப்பு நிற பானை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டதாக தொல்லியல் துறையினா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com