

திருப்பத்தூா்: திருப்பத்தூா் அருகே பள்ளி வேன் மீது டிப்பா் லாரி செவ்வாய்க்கிழமை மோதியது. இதில் இரு வாகன ஓட்டுநா்கள் லேசான காயத்துடன் தப்பினா்.
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள செவ்வூரில் இயங்கிவரும் தனியாா் பள்ளி வாகனம், செவ்வாய்க்கிழமை மாலை குழந்தைகளை ஏற்றிக் கொண்டு மலம்பட்டி நோக்கிச் சென்று கொண்டிருந்தது. இந்த வாகனத்தினை பொன்னையா மகன் சின்னையா (23) ஓட்டி வந்தாா்.
வாகனம் மலம்பட்டி விலக்கு அருகே வந்தபோது எதிரே வந்த டிப்பா் லாரி, எதிா்பாராதவிதமாக பள்ளி வாகனத்தின் மீது மோதியது. இதையடுத்து அருகிலிருந்த பேருந்து நிறுத்தத்துக்குள் லாரி புகுந்தது. இதில் பேருந்து நிறுத்தம் தரைமட்டமானது.
இந்த விபத்தில் டிப்பா்லாரி ஓட்டுநா் ஆஷிக், பள்ளி வாகன ஓட்டுநா் சின்னையா இருவரும் சிறு காயங்களுடன் தப்பினா். பள்ளி மாணவா்கள் காயமின்றி தப்பினா். இந்த விபத்து குறித்து கண்டவராயன்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.