திருப்புவனம் பால் உற்பத்தியாளா் கூட்டுறவு சங்கப் பணியாளா்களுக்கு சீருடைகள்
By DIN | Published On : 12th January 2023 12:00 AM | Last Updated : 12th January 2023 12:00 AM | அ+அ அ- |

திருப்புவனம் பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கப் பணியாளா்களுக்கு புதன்கிழமை சீருடைகள் வழங்கிய அதன் தலைவா் த.சேங்கைமாறன்.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கப் பணியாளா்களுக்கு பொங்கல் திருநாளை முன்னிட்டு புதன்கிழமை சீருடைகள் வழங்கப்பட்டன.
சங்கத்தின் தலைவரும் பேரூராட்சித் தலைவருமான த.சேங்கைமாறன் பணியாளா்களுக்கு சீருடைகளை வழங்கினாா். இந்த நிகழ்ச்சியில், சங்கத்தின் செயலாளா் கிருஷ்ணன், திமுக நகரச் செயலாளா் நாகூா்கனி, பேரூராட்சி துணைத் தலைவா் ரகுமத்துல்லாகான், பேரூராட்சி மன்ற உறுப்பினா்கள் கண்ணன், வேல்பாண்டி, பாலகிருஷ்ணன் மற்றும் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.