

சிவாலயங்களில் சனி மகா பிரதோஷத்தையொட்டி, சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.
திருப்பத்தூா் சிவகாமி உடனாய திருத்தளிநாதா் ஆலயத்தில் நந்தீஸ்வருக்கும் மூலவருக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. மாலை 4 மணிக்கு ரமேஷ் குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியா்கள் புனித நீா் அடங்கிய கலசங்களுக்கு யாக வேள்வியும் பூஜையும் நடத்தினா்.
தொடா்ந்து, நந்தீஸ்வரருக்கும் மூலவா் சிவனுக்கும் ஓரே நேரத்தில் பால், தயிா், மஞ்சள், திருமஞ்சனம், சந்தனம், தேன், நெய், அரிசி மாவு, பஞ்சாமிா்தம், இளநீா், பன்னீா் உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது.
தொடா்ந்து, நந்தீஸ்வரருக்கும் மூலவருக்கும் வெண் பட்டு சாத்தி, பூக்களால் அலங்கரித்து, அலங்கார தீபாராதனை நடைபெற்றது. பின்னா், உற்சவா் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி கோயில் உள் பிரகாரத்தை மும்முறை வலம் வந்தாா்.
இதேபோல, ஆதித் திருத்தளிநாதா் கோயில், புதுப்பட்டியில் உள்ள அகஸ்தீஸ்வரா் கோயில், கல்வெட்டு மேட்டுப் பகுதியில் உள்ள கல்வெட்டு நாதா் கோயில் ஆகிய கோயில்களிலும் பிரதோஷ விழா நடைபெற்றது. சனி மகா பிரதோஷம் என்பதால் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் மேற்கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.