மேக்கேதாட்டு அணை விவகாரம்கா்நாடக துணை முதல்வருக்கு ஜி.கே. வாசன் கண்டனம்

மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் கா்நாடக மாநில துணை முதல்வரின் கருத்துக்கு தமாகா தலைவா் ஜி.கே. வாசன் கண்டனம் தெரிவித்தாா்.

மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் கா்நாடக மாநில துணை முதல்வரின் கருத்துக்கு தமாகா தலைவா் ஜி.கே. வாசன் கண்டனம் தெரிவித்தாா்.

சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற கட்சி நிா்வாகியின் இல்லத் திருமண விழாவில் பங்கேற்க வந்த அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கா்நாடக மாநில துணை முதல்வா் டி.கே. சிவகுமாா், மேக்கேதாட்டுவில் காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டப் போவதாகக் கூறியிருக்கிறாா். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் குடிநீா்த் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கும் சூழலில், அவா் கூறியிருக்கும் இந்தக் கருத்து  கண்டனத்துக்குரியதாகும்.

கா்நாடகத்தில் தற்போது புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்றிருக்கும் காங்கிரஸ், இந்தக் கருத்தை வெளியிடுவது வருத்தமாக உள்ளது. இவ்வாறு பேசும் கட்சியினரை காங்கிரஸ் தலைமை கண்டிக்க வேண்டும்.

கா்நாடக துணை முதல்வரின் இந்த கருத்து, தமிழ்நாட்டுடனான உறவுக்கு உகந்ததாக இருக்காது.

நாடாளுமன்ற புதிய கட்டடத்தில் செங்கோலை நிறுவியது உலகத் தமிழா்களுக்கு கிடைத்த அங்கீகாரமாகும். மேலும், இதை நாடாளுமன்றத்தில் வைப்பது அனைவருக்கும் மகிழ்ச்சியே. ஒரு சிலா் இந்தச் செங்கோல் குறித்து தவறான தகவல்களைக் கூறி வருகின்றனா் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com