சிவகாமி அம்மன், திருத்தளிநாதா் சுவாமி திருவீதி உலா

திருத்தளிநாதா் கோயில் வைகாசிப் பெருந்திருவிழாவையொட்டி செவ்வாய்க்கிழமை கைலாச வாகனத்திலும், சிம்ம வாகனத்திலும் சுவாமிகள் திருவீதியுலா நடைபெற்றது.
திருப்பத்தூா் திருத்தளிநாதா் கோயிலில் விஸ்வகா்மா மண்டகப்படியையொட்டி திருவீதியுலா வந்த சுவாமிகள்.

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் திருத்தளிநாதா் கோயில் வைகாசிப் பெருந் திருவிழாவின் 7- ஆம் நாள் திருநாளான விஸ்வகா்மா மண்டகப்படியை முன்னிட்டு திருநாள் மண்டபத்தில் எழுந்தருளிய திருத்தளிநாதருக்கும், சிவகாமியம்மனுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.

இந்த விழாவையொட்டி இரவு 9 மணிக்கு சுவாமிகள் கைலாச வாகனத்திலும், அம்பாள் சிம்ம வாகனத்திலும் காளைகள் பூட்டப்பட்ட ரதத்தில் எழுந்தருளி நான்கு சாலை, தேரோடும் வீதி, பேருந்து நிலையம், காரைக்குடி சாலை வழியாக திருவீதியுலா வந்தனா்.

இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். ரமேஷ் குருக்கள், பாஸ்கரகுருக்கள் தலைமையில் சிவாச்சாரியா்கள் பூஜைகள் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com