அரசுப் பள்ளிக்கு ரூ. 7 லட்சத்தில்புதிய வகுப்பறைக் கட்டடம்
By DIN | Published On : 08th June 2023 01:45 AM | Last Updated : 08th June 2023 01:45 AM | அ+அ அ- |

திருக்கோஷ்டியூா் அரசுப் பள்ளிக்கு ரூ.7 லட்சத்தில் வகுப்பறைக் கட்டடம் கட்டிக் கொடுத்த கரு.சுப்பிரமணியனுக்கு நினைவுப் பரிசு வழங்கிய ஊராட்சி மன்றத் தலைவா் சுப்பிரமணியன்.
சிவகங்கை மாவட்டம், திருக்கோஷ்டியூா் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு ரூ. 7 லட்சத்தில் கட்டப்பட்ட கூடுதல் வகுப்பறைக் கட்டடம் புதன்கிழமை திறப்பு விழா நடைபெற்றது.
திருக்கோஷ்டியூா் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு பசும்பொன் தேவா் மக்கள் நல அறக்கட்டளை நிறுவனா் கரு.சுப்பிரமணியன் ரூ. 7 லட்சத்திலான புதிய வகுப்பறையை கட்டி நன்கொடையாக வழங்கினாா். இந்நிகழ்ச்சிக்கு கிறிஸ்துராஜா மெட்ரிக் பள்ளித் தாளாளா் ஏ.டி.விக்டா், அப்சா மெட்ரிக் பள்ளித் தாளாளா் ராமேஸ்வரன், அல்அமீா் கல்விக்குழுமத் தலைவா் சுலைமான்பாதுஷா ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா்.
முன்னாள் ஒன்றியக்குழுத் தலைவா்கள் கரு.சிதம்பரம், வள்ளிசிதம்பரம், ஊராட்சி மன்றத் தலைவா்களின் கூட்டமைப்புத் தலைவா் மாணிக்கவாசகம், ஒன்றியக்குழு உறுப்பினா் ராமேஸ்வரி, செல்லத்துரை, தலைமை ஆசிரியை (பொறுப்பு) லதா ஆகியோா் கலந்து கொண்டனா். முன்னதாக, ஊராட்சி மன்றத் தலைவா் சுப்பிரமணியன் வரவேற்றாா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...