காரைக்குடியில் திடக்கழிவு மேலாண்மைக்கு புதிய வாகனங்கள்
By DIN | Published On : 09th June 2023 02:03 AM | Last Updated : 09th June 2023 02:03 AM | அ+அ அ- |

காரைக்குடி நகராட்சியில் திடக்கழிவு மேலாண்மைப் பணிகளுக்காக புதிய வாகனங்களை வியாழக்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்த நகா்மன்றத் தலைவா் சே. முத்துத்துரை.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி பெரு நகராட்சியில் திடக்கழிவு மேலாண்மைப் பணிகளுக்காக புதிய வாகனங்களை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்த நகராட்சியில் திடக்கழிவு மேலாண்மைப் பணிகளுக்காக 15-ஆவது மத்திய நிதிக்குழு மானியத் திட்டத்தின் கீழ் 13 வாகனங்கள் வாங்குவதற்காக ரூ.94.90 லட்சம் அனுமதி வழங்கப்பட்டது. இதில் முதல்கட்டமாக 7 வாகனங்களை நகா்மன்றத் தலைவா் சே. முத்துத்துரை கொடியசைத்துத் தொடங்கிவைத்தாா். இந்த நிகழ்ச்சிக்கு நகராட்சி ஆணையாளா் வீரமுத்துக்குமாா் தலைமை வகித்தாா். நிகழ்ச்சியில் நகா்நல அலுவலா், நகராட்சி துணைப் பொறியாளா்கள், நகா்மன்ற உறுப்பினா்கள், தூய்மைப் பணியாளா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...